Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சங்கமித்ரா குழுவில் இணையும் இரு வெற்றிக் கூட்டணியினர்

In சினிமா
Updated: 05:07 GMT, May 23, 2017 | Published: 05:07 GMT, May 23, 2017 |
0 Comments
1180
This post was written by : Kandeepan

சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ஜெயம் ரவி இணைந்து நடிக்கும் படம் ‘சங்கமித்ரா’ ஆகும். ஸ்ருதிஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள இப்படம்.

பிரான்சில் நடைபெற்று வரும் 70 – வது கேன்ஸ் திரைப்பட விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதற்காக பிரான்ஸ் சென்றுள்ள ‘சங்கமித்ரா’ படக்குழு அங்கு சங்கமித்ராவை அறிமுகம் செய்து வைத்து  போஸ்டர்களையும் வெளியிட்டுள்ளனர்.

இதில் சுந்தர்.சி, ஹேமா ருக்மணி, ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன், ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் ரூ. 300 கோடி செலவில் பிரமாண்டமாக தயாராகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

8 – ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கமித்ரா என்ற பதுமையை மையமாகக் கொண்டு இக் கதை உருவாக்கப்பட்டுள்ளது.

ஆனி மாதத்தின் முதற்பாதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக படக்குழு தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இந் நிலையில் பிரபல தொழில்நுட்பக் கலைஞர்களும் ‘சங்கமித்ரா’ படக்குழுவில் இணைந்திருக்கின்றனர். இதனை விட மேலும் இரு பிரபலங்கள் ‘சங்கமித்ரா’ படக்குழுவில் இணையவிருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் சுபா என்று அழைக்கப்படும் பிரபல திரைக்கதை எழுத்தாளர்களான சுரேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் சங்கமித்ராவுக்கு திரைக்கதை எழுத இருக்கின்றனர்.

இவர்களது வெற்றிக் கூட்டணியில் சமீபத்தில் வெளியான ‘கவண்’ நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவற்றை விட இவர்கள் கூட்டணியில் வெளியான சில வெற்றிப் படங்களான ‘தனி ஒருவன்’, ‘அனேகன்’, ‘ஆரம்பம்’, ‘மாற்றான்’, ‘கோ’ மற்றும் ‘அயன்’ ஆகியன அமைகின்றன.

இதனை விட ஷங்கர் – விக்ரம் கூட்டணியில் வெளியான ‘ஐ’ படத்திலும், விஜயின் ‘வேலாயுதம்’ படத்திலும் பணியாற்றி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg