Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சங்கு சக்கரம் திரைப்படத்திற்கு மேலும் ஒரு கௌரவம்

In சினிமா
Updated: 05:49 GMT, May 23, 2017 | Published: 05:22 GMT, May 23, 2017 |
0 Comments
1118
This post was written by : Kandeepan

பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்புராயன் முக்கிய வேடத்தில் நடித்துவரும் புதிய படம் ‘சங்கு சக்கரம்’. அனைத்து பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில் சான்றிதழ் பெறுவதற்கு தணிக்கை குழுவினருக்கு இப்படம் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு’ தரச் சான்றிதழ் வழங்கியுள்ளனர். “யு“ சான்றிதழ் வழங்கியது மாத்திரமன்றி படக்குழுவினரையும் பாராட்டி படம் சிறப்பாகவுள்ளது என்று கூறியுள்ளனர்.

தணிக்கை குழுவினரின் பாராட்டு, ‘யு’ சான்றிதழ் இரண்டும் படக்குழுவினரை மிகவும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

இப்படத்தை மாரீசன் என்பவர் இயக்கியுள்ளார். இவருடன் கீதா, ஜெர்மி ரோஸ், ராக்கி, ‘பசங்க-2’ நிஷேஷ் மற்றும் 8 குழந்தை நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.  விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். ஜி.ரவிகண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கேலி, கிண்டல், நையாண்டி கலந்த இப்படத்துக்காக திலீப் சுப்புராயன் ஒரு வருடமாக முடி வளர்த்து நடித்துள்ளார்.

லியோ விஷன்ஸ், சினிமா வாலா பிக்சர்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை வருகின்ற ஆனி மாதத்தில் வெளியிட திரைக் குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg