Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அ.தி.மு.க அரசால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் இல்லை: தமிழிசை

In இந்தியா
Updated: 12:26 GMT, May 23, 2017 | Published: 05:56 GMT, May 23, 2017 |
0 Comments
1184
This post was written by : Shailu
Tamilisai

அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இது வரை மக்களுக்கு எவ்வித நன்மைகளும் இடம்பெறவில்லை என தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு வழங்கிய செவ்வி அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “அ.தி.மு.க. அரசு ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், இவ்வரசின் சாதனை என்று கூறுவதற்கு எதுவும் இல்லை.

பதவியேற்ற ஓராண்டுக்குள் கட்சி இரண்டாக பிளவுற்றதோடு, இதுவரை மூன்று முதல்வர்கள் மாறியுள்ள நிலையில், மூன்று அமைச்சரவை பதவி ஏற்றுள்ளது. அத்தோடு கட்சியின் சின்னமும் தொலைக்கப்பட்டுள்ளது.

இடைத்தேர்தலில் வாக்கு பெறுவதற்காக பணம் கொடுக்கப்பட்டதால் தேர்தல் இரத்தாகி உள்ளதோடு, ஊழல் வழக்கில் அக்கட்சியின் இரண்டு பொதுச்செயலாளர்களும் சிறையில் உள்ளனர்.

தமிழக அமைச்சர்கள் பலரின் வீடுகளில் வருமான வரி சோதனை இடம்பெற்றுள்ளது. நேர்மையான, வெளிப்படையான நிர்வாகம் அ.தி.மு.க. அரசில் இல்லை. எனவே இனி வரும் காலங்களில் அ.தி.மு.க அரசாங்கம் மக்களுக்கு நல்ல விடயங்களை செய்ய வேண்டும்.

மத்திய பா.ஜனதா அரசு மூன்று ஆண்டுகள் ஆட்சி காலத்தில் ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் தங்கள் சாதனைகளை வெளியிட்டுள்ளனர். அதே போல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசின் அமைச்சர்களும் தாங்கள் செய்த சாதனைகளை வெளியிட வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg