Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

துடுப்பாட்ட வரிசையை மாற்றுவதால் பிரச்சினை இல்லை: ரோஹித் ஷர்மா

In கிாிக்கட்
Updated: 07:11 GMT, May 23, 2017 | Published: 06:38 GMT, May 23, 2017 |
0 Comments
2248
This post was written by : Elakkiya

ஐ.பி.எல் தொடரில் துடுப்பாட்ட வரிசையில் நான்காவது வீரராக களமிறங்கிய மும்பை இந்தியன் அணித்தலைவர் ரோஹித் ஷர்மா ஐ.சி.சி சம்பியன் கிண்ண கிரிக்கட் தொடரின் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கவுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஷர்மா, ‘ இதனால் எந்த பிரச்சினையும் இல்லை. சர்வதேச கிரிக்கட் போட்டிகளிலிருந்து மிகவும் வேறுபட்டதே ஐ.பி.எல் கிரிக்கட். ஐ.பி.எல் போட்டி ஆரம்பமாகுவதற்கு முன்னரே அணிக்கு சமநிலையை கொடுப்பேன் என்றும் நடுத்தர துடுப்பாட்ட வரிசையில் துடுப்பெடுத்தாடுவேன் என்றும் தெரிவித்திருந்தேன். ஆனால் இவ்விரண்டையும் எதற்காக ஒப்பிட்டு பார்கின்றனர் என்பது எனக்கு புரியவில்லை.

ஐ.பி.எல் போட்டியின் பின்னர் சர்வதேச டெஸ்ட் போட்டியிலோ அல்லது ஒருநாள் போட்டியிலோ வீரர்கள் விளையாடுவது என்பது கடந்த பத்து வருடங்களாக இடம்பெறுகின்றது. இது கடினமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதற்கான மனநிலையை நாம் உருவாக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg