Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பை வழங்காதது கவலைக்குரியது: இராதாகிருஷ்ணன்

In இலங்கை
Updated: 07:18 GMT, May 23, 2017 | Published: 06:49 GMT, May 23, 2017 |
0 Comments
1199
This post was written by : Vithushagan
unnamed (20)

பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு அதிகரிப்பை மாகாணங்கள் வழங்காதது கவலைக்குரிய விடயம் என கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

புசல்லாவ இந்து தேசிய கல்லூரியில் நடைபெற்ற 3 மாடி கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும் தொழில்நுட்ப பீடம், விஞ்ஞான ஆய்வு கூடம், பல் ஊடக தொகுதி திறப்பு, விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், `மலையக பெருந்தோட்ட ஆசிரியர் உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் 6000 ரூபா கொடுப்பனவில் இருந்து 4000 ரூபாவாக அதிகரித்து மொத்தமாக 10,000 ரூபா பெற்றுக் கொடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த தீர்மானத்தை நாடாளுமன்றத்தின் அனுமதி பெற்று அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 3ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றுநிருபம் ஒன்று அனைத்து மாகாண செயலாளர்களுக்கும், மாகாண கல்விச் செயலாளர்களுக்கும், மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும், வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய மாகாணங்கள் நடவடிக்கைளை மேற்கொண்டு பெருந்தோட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து கொடுக்க வேண்டியது அவர்களின் கடமையாகும்.

பெப்ரவரி மாத முதல் நிலுவையுடன் இம்மாதம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதை இதுவரைக்கும் வழங்கவில்லை. எனவே உடனடியாக வழங்குவதற்கு மாகாணங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்நிலையில் மீண்டும் நான் வழங்கவில்லை என கூறி வருகின்றனர். இது தவறு. நான் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்துவிட்டேன்.இனி மாகாணங்கள் தான் அதற்கு மேலதிகமானதை செய்ய வேண்டும்’  என  தெரிவித்திருந்தார்.

பாடசாலையின் அதிபர் ஆர்.விஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மாகாணசபை உறுப்பினர் ஆர். ராஜாராம், மத்திய மாகாண மேலதிக கல்விப்பணிப்பாளர் எஸ்.சதீஸ் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் கம்பளை கல்வி வலய அதிகாரிகள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், தொழிற்சங்க பிரமுகர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், நலன் விரும்பிகள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

unnamed (14) unnamed (15)

unnamed (24)

unnamed (25)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg