Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய திட்டம் இல்லை: ராதாமோகன் சிங்

In இந்தியா
Updated: 07:24 GMT, May 23, 2017 | Published: 07:19 GMT, May 23, 2017 |
0 Comments
1218
This post was written by : Shailu

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்துள்ள கருத்தானது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் “கடன் தள்ளுபடி மட்டுமே விவசாயிகளின் பிரச்சினைக்கு நீண்டகால தீர்வாக அமையாது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய அளவில் மீண்டும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனரும், அதன் தலைவருமான அய்யாக்கண்ணு தெரிவித்துள்ள நிலையில் ராதாமோகன் சிங் மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.

பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் 40 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

விவசாயிகளுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை தொடர்ந்து அவர்களின் போராட்டம் தற்காலிகமாக மீளப் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg