Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எதிர்வரும் 26 ஆம் திகதி திரைக்கு வரும் சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’

In சினிமா
Updated: 07:51 GMT, May 23, 2017 | Published: 07:29 GMT, May 23, 2017 |
0 Comments
1243
This post was written by : Kandeepan

சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’ திரைப்படம் எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கின்றது.

சமுத்திரகனியின் நடிப்பு மற்றும் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த திரைப்படத்தில் சுனைனா, அர்த்தனா, விக்ராந்த், நமோ நாராயணன், தம்பி ராமையா, கஞ்சா கருப்பு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார்.

நாளை முதல் திரையரங்குகளில் இப்படத்தின் டிக்கெட் விற்பனை ஆரம்பிக்கின்றது. தமிழகம் முழுவதும் இப்படம் சுமார் 300 திரையரங்குகளுக்கும் அதிகமாக வெளியிடப்போவதாக படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

வசுந்தராதேவி சினி பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மணிகண்டன் மற்றும் நாடோடிகள் நிறுவனம் சார்பில் சமுத்திரகனி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

ஆர்.மணிகண்டன் இதுவரை தமிழ் சினிமாவில் நிறைய வெற்றி படங்களுக்கு விநியோகஸ்தராக பணியாற்றியவர். இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக களமிறங்கியிருக்கிறார்.

‘அப்பா’ திரைப்படத்தைப் போன்று இப்படத்திலும் சமூகத்திற்கு தேவையான செய்திகள் இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

Tags:


toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg