Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் பிரசார நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

In
Updated: 08:58 GMT, May 23, 2017 | Published: 08:52 GMT, May 23, 2017 |
0 Comments
1579
This post was written by : Sylviya
10

மன்செஸ்டரில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து பிரித்தானியாவில் எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி நடத்தப்படவிருந்த பொதுத் தேர்தல் குறித்த பிரசார நடவடிக்கைகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்  எடின்பர்க்கில் வெளியிடப்படவிருந்த நிலையில், குறித்த நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளதாக அண்மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கொட்லாந்தின் ஏனைய அரசியல் கட்சிகளும் தங்களது பிரசார நடவடிக்கைகளை   இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg