Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ராஸ்பேர்க் டென்னிஸ் தொடரிலிருந்து கரோலினா விலகல்

In டெனிஸ்
Updated: 10:43 GMT, May 23, 2017 | Published: 09:43 GMT, May 23, 2017 |
0 Comments
1234
This post was written by : Elakkiya

பிரான்ஸில் நடைபெறும் சர்வதேச ஸ்ராஸ்பேர்க் டென்னிஸ் தொடரிலிருந்து (Internationaux de Strasbourg) டென்மார்க் வீராங்கனை கரோலினா வொஸ்னியாக்கி விலகியுள்ளார்.

26 வயதான வொஸ்னியாக்கி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற முதல்சுற்றுப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஷெல்பி ரோஜர்ஸை எதிர்த்து 7:6, 1:0 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

இந்நிலையில் முதுகுவலி காரணமாக தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ முதல் செட்டின் பாதி ஆட்டத்தில் வலியை நான் உணர்ந்தேன். இந்த நேரத்தில் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடருக்கு 100 சதவீதம் தயாராக வேண்டியது முக்கியம் என்று கருதுகின்றேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg