Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானியாவில் நடத்தப்பட்ட தாக்குதல்: எர்டோகன் கண்டனம்

In ஐரோப்பா
Updated: 11:08 GMT, May 23, 2017 | Published: 11:06 GMT, May 23, 2017 |
0 Comments
1533
This post was written by : Sylviya

ஒன்றுமறியாத அப்பாவி இளவயதினர்களை காவுகொண்ட பிரித்தானியத் தாக்குதலுக்கு துருக்கி ஜனாதிபதி தையீப் எர்டோகன் இன்று (செவ்வாய்க்கிழமை) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இஸ்தான்புல்லில் நடத்தப்பட்ட பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு  கண்டனம் தெரிவித்துள்ளார்.

2005ஆம் ஆண்டு பிரித்தானியாவில் நடத்தப்பட்ட தாக்குதலை விட மன்செஸ்டரில் நடத்தப்பட்ட தாக்குதல் மிகக் கொடூரமானது எனவும் எர்டோகன் தெரிவித்துள்ளார்.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்காத போதிலும், ஐ.எஸ் இன் ஆதரவாளர்கள் மற்றும் விசுவாசிகள் இந்த தாக்குதல் குறித்து மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

பிரித்தானியா மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் இணைந்து ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்களை தீவிரப்படுத்தவிருந்த நிலையிலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg