Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யோசித்த ராஜபக்ஷ வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி!

In இலங்கை
Updated: 12:24 GMT, May 23, 2017 | Published: 12:05 GMT, May 23, 2017 |
0 Comments
1491
This post was written by : Ravivarman

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஷவுக்கு, வெளிநாடு செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

வெளிநாடு செல்வதற்கு அனுமதி தருமாறு யோசித்த, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த மனு இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, கொழும்பு மேல் நீதிமன்ற நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த மாதம் 31 ஆம் திகதி தொடக்கம் இரண்டு மாதங்களுக்கு ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா செல்ல யோசித்த அனுமதி கோரியிருந்த நிலையிலேயே மேற்படி அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பணமோசடிச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட யோசித்த ராஜபக்ஷவின் கடவுச்சீட்டு நீதிமன்றத்தால் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg