Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராஜகிரிய மேம்பாலத்தின் பணிகள் விரைவில் பூர்த்தியாக்கப்படும்

In இலங்கை
Updated: 14:56 GMT, May 23, 2017 | Published: 14:56 GMT, May 23, 2017 |
0 Comments
1303
This post was written by : Ravivarman

ராஜகிரிய மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகள் இவ்வார இறுதிக்குள் பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிடைக்கும் என செயற்றிட்டப் பணிப்பாளர் பிரியல் வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

540 மீற்றர் நீளமான ராஜகிரிய மேம்பாலம் நான்கு பாதைகளை கொண்டதாகும். இதற்கென 450 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதுடன் ஸ்பெயின் அரசாங்கம் சலுகை அடிப்படையிலான கடனை வழங்கியுள்ளது.

நிர்மாணப் பணிகள் அடுத்த ஆண்டில் பூர்த்தியாகும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், நவீன தொழில்நுட்பம், ஒப்பந்தக்காரர்களின் வினைத்திறன் என்பனவற்றினால் விரைவான முறையில் பணிகளை பூர்த்தி செய்யும் வாய்ப்பு கிடைத்திருப்பதாக பணிப்பாளர் கூறினார்.

தற்சமயம் 65 சதவீதமான நிர்மாணப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதுடன் இரவு – பகலாக இந்தப் பாலம் நிர்மாணிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg