Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பணிப்புறக்கணிப்பிற்கு தயாராகும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

In இலங்கை
Updated: 06:28 GMT, May 24, 2017 | Published: 02:15 GMT, May 24, 2017 |
0 Comments
1349
This post was written by : Ravivarman

சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பான பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வொன்றை முன்வைக்க அரசாங்கம் தவறினால் முன்னறிவித்தல் இன்றி பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்கம் சைட்டம் பிரச்சினைக்கு உரிய தீர்வை விரைவில் முன்வைக்காவிடின் தொடர்ந்தும் பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்கவுள்ளதாக அச்சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்ஷா தெரிவித்துள்ளார்.

மேற்படி பணிப்புறக்கணிப்பு தொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரத்தை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழுவிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிரை்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதி இலங்கை மருத்துவ சபையின் தலைவர் பதவியில் மாற்றம் இடம்பெறவுள்ளது. இதுவரையில் அரசாங்கம் இப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காமல் இழுத்தடிப்பு செய்யும் என்பதும் அதனால் பெரிதும் பாதிக்கப்படப் போவது பொதுமக்கள்தான் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg