Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

குறிகட்டுவான் துறைமுகத்தில் பழுதடைந்த நிலையில் வடதாரகை!

In இலங்கை
Updated: 04:28 GMT, May 24, 2017 | Published: 03:53 GMT, May 24, 2017 |
0 Comments
1534
This post was written by : Ravivarman

நெடுந்தீவுக்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டிருந்த வடதாரகை படகானது பழுதடைந்த நிலையில் குறிகட்டுவான் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த படகானது கடந்த ஒருமாத காலமாக சேவையிலிருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி படகினைத் திருத்துவதற்குத் தேவையான உதிரிப்பாகங்கள் வெளிநாட்டில் இருந்து வரவழைக்க வேண்டியிருப்பதாலேயே படகினது திருத்த வேலைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

வடதாரகைப் படகினது சேவையானது நிறுத்தப்பட்டுள்ளதால் நெடுந்தாரகை மற்றும் குமுதினிப் படகுகளுடன் சில தனியார் படகுகளும் சேவையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg