Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சீனாவின் கடன்மதிப்பை மூடிஸ் நிறுவனம் குறைத்துள்ளது

In வணிகம்
Updated: 10:55 GMT, May 24, 2017 | Published: 09:57 GMT, May 24, 2017 |
0 Comments
1212
This post was written by : Elakkiya

பொருளாதாரம் குறித்த எதிர்கால கவலைகளுக்கு மத்தியில் சீனாவின் கடன்மதிப்பை மூடிஸ் முதலீட்டாளர் சேவைகள் நிறுவனம் குறைத்துள்ளது.

மூடிஸ் முதலீட்டாளர் சேவைகள் நிறுவனம், சீனாவின் நீண்டகால உள்நாட்டு நாணய மற்றும் வெளிநாட்டு நாணய வழங்குனர்கள் மதிப்பீட்டை Aa3 இலிருந்து A3 க்கு குறைத்துள்ளது.

இந்த தர இறக்கமானது சீன அரசாங்கத்திற்கான கடன்வாங்குவதற்கான செலவை அதிகரிக்க முடியும் என்று கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து மூடிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பொருளாதாரம் சார்ந்த கடன் வளர்ச்சியிலும் பார்க்க சீனாவின் நிதி பலம் எதிர்வரும் ஆண்டுகளில் ஓரளவிற்கு மாற்றமடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மூடிஸ் நிறுவனம் நாட்டின் பொருளாதார சிக்கல்களை மிகைப்படுத்தி சீர்திருத்த முயற்சிகளை குறைத்து மதிப்பிடுவதாக சீனாவின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சீன பொருளாதாரமானது 2016ஆம் ஆண்டில் 6.7 சதவீதமாக அதிகரிப்பை காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg