Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.பி.எல். தொடரானது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மாறுபட்டது: ரோஹித் ஷர்மா

In கிாிக்கட்
Updated: 11:13 GMT, May 24, 2017 | Published: 10:34 GMT, May 24, 2017 |
0 Comments
1211
This post was written by : Anojkiyan

இந்தியாவில் நடைபெறும் ரி-ருவென்ரி திருவிழாவான ஐ.பி.எல். தொடரானது, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மாறுபட்டது என இந்திய கிரிக்கெட் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். தொடரில் 4வது வீரராக களம் இறங்கிய ரோஹித் ஷர்மா, ஒருநாள் தொடரில் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கும் போது கடும் நெருக்கடிகளை எதிர்கொள்வார் என பலரும் விமர்சித்துவருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள ரோஹித் ஷர்மா, “ஐ.பி.எல். தொடரில் 4வது வீரராக களம் இறங்கியது, சம்பியன்ஸ் கிண்ண தொடரில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஐ.பி.எல். தொடரானது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து மாறுபட்டது. ஐ.பி.எல். தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பே நான் அணியின் துடுப்பாட்ட பலத்தை சரிசெய்வதற்காக 4வது இடத்திற்காக களம் இறங்குவதாக கூறியிருந்தேன். இரண்டு வகை கிரிக்கெட்டையும் ஏன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் இருந்து டெஸ்ட் போட்டிக்கும், ஒருநாள் போட்டிக்கும் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த வயதில் ஐ.பி.எல். தொடரில் விளையாடி விட்டு சம்பியன்ஸ் கிண்ண தொடருக்காக என்னை மாற்றிக் கொள்வதில் எந்த கடினமும் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg