Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஞ்செஸ்டர் குண்டுதாரி சிரியாவிற்கு சென்று ஐ.எஸ்.-உடன் தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாம்: பிரான்ஸ் அமைச்சர்

In ஐரோப்பா
Updated: 11:42 GMT, May 24, 2017 | Published: 11:23 GMT, May 24, 2017 |
0 Comments
1226
This post was written by : Risha

மஞ்செஸ்டர் தாக்குதலை மேற்கொண்ட தற்கொலைக் குண்டுதாாி சல்மான் அபேடி, லிபியாவிற்கும், சிரியாவிற்கும் பயணித்து ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பை ஏற்படுத்தியிருக்கலாம் என பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெராட் கொலம்ப் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஊடகமொன்றுக்கு அவர் இன்று (புதன்கிழமை) வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், பிரித்தானிய குடியுரிமை பெற்ற லிபிய வம்சாவளியான அபேடி, லிபியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்டு பின்னர் சிரியாவிற்கும் விஜயம் செய்திருக்கலாம். அதன் பின்னரே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அதேவேளை, ஐ.எஸ். வலையமைப்புடன் அபேடிக்கு தொடர்புண்டா என வினவியபோது, அதனை இதுவரை உறுதிபடுத்த முடியாத போதிலும் சில வழக்குகளில் அவருக்கும் ஐ.எஸ்.-இற்கும் தொடர்பு இருப்பதாகவே நம்பப்படுகிறது எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg