Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒரே பார்வையில் இன்றைய உலகச் செய்திகள்

In
Updated: 16:21 GMT, May 24, 2017 | Published: 16:21 GMT, May 24, 2017 |
0 Comments
1645
This post was written by : Sivaguru Siva

மஞ்செஸ்டரில் நடத்தப்பட்ட தற்கொலைத்  தாக்குதலுக்கு பின்னாலுள்ள வலையமைப்பை தாம் நெருங்கிவிட்டதாக பிரித்தானிய காவற்துறை தெரிவித்துள்ளது.

இந்தத்தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் தற்கொலை குண்டுதாரியாக சந்தேகிக்படும் சல்மான் அபடியின் சகோதர் உட்பட  இன்று காலை மேலும் மூவர் தெற்கு மஞ்சஸ்டர் பகுதியில் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் லண்டனின் பாதுகாப்பு கருதி காவற்துறையினருக்கு மேலதிகமாக முக்கிய இடங்களில் பிரித்தானியப் படையினரும் களமிறக்கப்பட்டுள்ளனர்

இதேவெளை மஞ்செஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் கடமையில் இல்லாத பெண் காவற்துறை அதிகாரியொருவரும் அடங்கியுள்ளதாக தற்போது அறிவிக்கபட்டுள்ளது.

_96194482_mediaitem96194481

மஞ்செஸ்டரில் தாக்குதலில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவவென சமுக அமைப்புகள் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட மக்களால் திரட்டப்படும் நிதி தற்பொது 1.5 மில்லியன் பவுண்சை தாண்டியுள்ளது.

இந்தநிதி பிரித்தானிய செஞ்சிலுவை சங்கத்திடம் கையளி;ப்படுமெனவும் அறிவிக்கபடுகிறது.

_96188254_e959a8a9-26e5-4ebd-a388-bcaa273238d4

அமெரிக்க அரசதலைவர் டொனால்ட் ரம் இன்று வத்திக்கானில் பாப்பரசர் பிரான்சை சந்தித்து தனிப்பட்டரீதியிலான பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

டொனால்ட் ரம்பின் பதவியேற்புக்கு பின்னர் குடியேறிகள் மற்றும் மெக்சிக்கொ தடுப்புசுவர் தொடர்பான விடயங்களில் டொனால் ட்ரம்புடன் பாப்பரசர் பிரான்ஸி;ஸ் முரண்பட்ட நிலையில் இன்று இந்தச்சந்திப்பு நடந்துள்ளது

_96188312_08adffa2-37f9-4831-b601-2b71355f7179

இமயமலையில் மேலும்; உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இந்த இழப்புக்களுடன் சேர்த்து இந்தமுறை மலையேற்றக்காலத்தில் மரணமடைந்தவர்களின் தொகை பத்தாக உயர்ந்துள்ளது.

இரண்டு மலையேறிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களும் அவர்கள் தங்கியிருந்த கூடாரத்தில் உடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் சுவாசிப்பதற்கு ஒட்சிசன் இல்லாததால் இவர்கள் மரணடைந்திருக்கலாமென கருதப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg