Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிலிப்பைன்ஸில் இரண்டாவது நாளாகவும் தொடரும் தாக்குதல்

In உலகம்
Updated: 12:21 GMT, May 25, 2017 | Published: 05:38 GMT, May 25, 2017 |
0 Comments
1847
This post was written by : Sylviya

பிலிப்பைன்ஸ் அரசின் துருப்புக்களுக்கும், தெற்கு பிலிப்பைன்ஸில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையில் இன்று (வியாழக்கிழமை) இரண்டாவது நாளாகவும் கடும் தாக்குதல் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதல்களின் போது இதுவரை ஏழு அரச துருப்புக்கள் மற்றும் 13 ஐ.எஸ். தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளதாகவும் 33 துருப்புக்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் இராணுவ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த தாக்குதல் மராவி எனும் நகருக்கு அருகில் அமைந்துள்ள இராணுவ முகாமிற்கு அருகிலேயே நடத்தப்பட்டு வருகின்றதென குறிப்பிடப்பட்டுள்ளது.

மராவி நகரத்தில் ஐ.எஸ். தீவிரவாதிகள் நேற்று முன்தினம் நடத்திய தாக்குதலில் அங்குள்ள பல நிறுவனங்கள் தீயினால் கருகிச் சாம்பலாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இச்சம்பவம் காரணமாக  பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ (Rodrigo Duterte), ரஷ்யாவுக்கான தனது விஜயத்தை இரத்து செய்ததுடன் பிலிப்பைன்ஸின் தீவான மிண்டனோவோவில் இராணுவச் சட்டத்தையும் அமுல்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg