Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பியன்ஸ் கிண்ண தொடரில் புதிய யுக்தியை கையாள அஸ்வின் திட்டம்

In கிாிக்கட்
Updated: 06:38 GMT, May 25, 2017 | Published: 06:11 GMT, May 25, 2017 |
0 Comments
1439
This post was written by : Anojkiyan

சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் புதிய யுக்தியுடன் பந்துவீச திட்டமிட்டிருப்பதாக இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தெரவித்துள்ளார்.

மும்பையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் எனது பந்துவீச்சில் புதிய யுக்தியை கையாளப் போகிறேன். அதை இரண்டு பயிற்சி போட்டிகளில் சோதித்துப் பார்க்க திட்டமிட்டுள்ளேன். போட்டித் தொடரில் சிறப்பாக விளையாடுவதற்கு இது உதவும். எனது புதிய யுக்திகள் அணியின் வெற்றிக்கு நிச்சயம் பயனளிக்கும் என நம்புகிறேன்.

ஒருநாள் போட்டியில் ஐ.சி.சி. புதிய விதிகளை கொண்டுவந்துள்ளதால் பந்துவீச்சில் பழைய யுக்திகளுடன் செயற்படுவது பலனளிக்காது. அதற்கு ஏற்றாற்போல் புதிய யுக்திகளை புகுத்த முடிவு செய்துள்ளேன். ஐ.பி.எல். தொடர் இந்திய கிரிக்கெட்டுக்கு நல்லதாகும். இதன்மூலம் திறமை வாய்ந்த இளம் வீரர்கள் கண்டறியப்படுகிறார்கள்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg