Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஞ்செஸ்டரில் உயிரிழந்த உறவுகளுக்கு ஐரோப்பா கிண்ணம் சமர்ப்பணம்

In உதைப்பந்தாட்டம்
Updated: 12:23 GMT, May 25, 2017 | Published: 09:41 GMT, May 25, 2017 |
0 Comments
1892
This post was written by : Anojkiyan

இங்கிலாந்தின் மஞ்செஸ்டரில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஐரோப்பா கிண்ணத்தை சமர்ப்பிப்பதாக மஞ்செஸ்டர் அணியின் நடசத்திர வீரர் போல் போக்ஹா தெரிவித்துள்ளார்.

இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற இறுதிப்போட்டியில் எஜக்ஸ் அணியை எதிர்கொண்ட மென்சென்ஸ்டர் அணி, போல் போக்ஹா மற்றும் ஹன்ரிக் மெக்கிட்டரியான் ஆகியோரின் துணையுடன் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.

இவ் வெற்றியின் பின் நிருபர்களிடம் கருத்து தெரிவித்த போல் போக்ஹா, “மஞ்செஸ்டர் தாக்குதலில் உயிரிழந்த எமது உறவுகளுக்காகவே நாம் விளையாடினோம். அவர்களுக்கு இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறோம். இந்த பருவகாலம் எங்களுக்கு மிகவும் மோசமானதாக அமையும் என சிலர் தெரிவித்தனர்.

எனினும் நாம் சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றிருக்கிறோம். இதற்கு நாம் பெருமையடைகிறோம். நாம் இந்த வெற்றிக்காக மிகவும் கஷ்டப்பட்டு உழைத்தோம். அதற்காக நாம் இப்பொழுது சந்தோஷப்படுகிறோம்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg