Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி நேரில் ஆஜராக உத்தரவு

In இந்தியா
Updated: 10:22 GMT, May 25, 2017 | Published: 09:37 GMT, May 25, 2017 |
1 Comment
1352
This post was written by : Shailu

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் உமா பாரதி உள்ளிட்டோரை நேரில் ஆஜராகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு குற்றப்புலனாய்வு (சி.பி.ஐ) சிறப்பு நீதிமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது விசாரணைக்கு நேரில் ஆஜராக விலக்கு கோரிய அத்வானி உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், எதிர்வரும் 30 ஆம் திகதி இவர்களை நேரில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 ஆம் திகதி அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இதுதொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் அத்வானி உள்ளிட்ட 13 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இக்குற்றச்சாட்டிலிருந்து 13 பேரையும் விடுவித்ததை தொடர்ந்து மத்திய புலனாய்வு துறையினர் உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg
  1. Mithra