Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீட் பரீட்சையை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

In இந்தியா
Updated: 12:18 GMT, May 25, 2017 | Published: 10:27 GMT, May 25, 2017 |
0 Comments
1259
This post was written by : Shailu

நீட் பரீட்சையை இரத்துச் செய்யக் கோரிய தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

நீட் பரீட்சை முடிவுகளை வெளியிட உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இன்று (வியாழக்கிழமை) மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மருத்துவம் மற்றும் பல்மருத்துவக் கல்லூரிகளில் இணைந்துக்கொள்வதற்காக நாடு முழுவதற்குமான பொது நுழைவுப் பரீட்சை கடந்த 7ஆம் திகதி நடைபெற்றது.

இதனையடுத்து இப்பரீட்சை முடிவுகள் எதிர்வரும் ஜூன் 8ஆம் திகதி வெளியிடப்பட இருந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பரீட்சை முடிவுகளை வெளியிடத் தடை விதித்தது.

இதனையடுத்து, நீட் தேர்வை இரத்துச் செய்யக் கோருவதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், இவ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg