Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரத்துபஸ்வல துப்பாக்கிச் சூட்டுச்சம்பவம்: இராணுவ அதிகாரி கைது

In இலங்கை
Updated: 11:37 GMT, May 25, 2017 | Published: 11:37 GMT, May 25, 2017 |
0 Comments
1188
This post was written by : Vithushagan

வெலிவேரிய ரத்துபஸ்வல பிரதேசத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் இராணுவ அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரிகேடியர் தேசப்பிரிய குணவர்தன என்ற இராணுவ அதிகாரியை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) கைது செய்துள்ளனர்.

வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு சென்றிருந்த போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கையுறைகளை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்றினால் வௌியேற்றப்படும் கழிவுகள் மூலம் குடிநீரில் விஷத் திரவியங்கள் கலப்பதாக கூறி கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.  இந்த தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுடன் மேலும் பலர் காயமடைந்திருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg