Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பீட்ரூட் மினி பூரி

In
Updated: 11:59 GMT, May 25, 2017 | Published: 11:59 GMT, May 25, 2017 |
0 Comments
1264
This post was written by : Shailu

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு – ஒரு கப்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகுத்தூள், ஓமம் – தலா அரை டீஸ்பூன்
பீட்ரூட் துருவல் – 2
கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.பீட்ரூட்டை துருவிக்கொள்ளவும். பச்சை பட்டாணியை மிக்ஸியில் ஒன்று இரண்டாக அரைக்கவும்.

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, சீரகம், மிளகுத்தூள், பீட்ரூட் துருவல், கொத்தமல்லி, இஞ்சி – பூண்டு விழுது, பச்சை பட்டாணி, உப்பு சேர்த்து நன்றாக கலந்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்.

பிசைந்த மாவை சின்ன பூரிகளாக தேய்த்து, சூடான எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்துப் பரிமாறவும். தற்போது சுவையான, சத்தான பீட்ரூட் மினி பூரி தயார்..!

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg