Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அழகு மற்றும் ஆரோக்கியம் தரும் மஞ்சளின் மகத்துவம்!

In
Updated: 12:38 GMT, May 25, 2017 | Published: 12:38 GMT, May 25, 2017 |
0 Comments
1335
This post was written by : Shailu

மஞ்சள் கிருமிகளிடமிருந்தும், தொற்றுக்களிடமிருந்தும், பல்வேறு சரும நோய்களிடமிருந்தும் நம்மை காப்பாற்றும்.

இந்நிலையில் வெயிலில் செல்வதால் உண்டாகும் கருமையை போக்க வாரம் ஒருமுறை அல்லது இருமுறை மஞ்சள் பேக் போடலாம். இதனால் சருமம் மிக பொலிவாக மாறி சரும பிரச்சனைகள் சரியாகிவிடும். அந்தவகையில் மஞ்சள் பேக் எப்படி செய்வது என பார்க்கலாம்

தேவையான பொருட்கள்

கடலை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் – அரை ஸ்பூன்
பாதாம் எண்ணெய் – 1 டீஸ்பூன்
பால் – 3 டீஸ்பூன்

கடலை மாவில் மஞ்சள், பாதாம் எண்ணெய் விட்டு, கடைசியில் பேஸ்ட் செய்யும் அளவிற்கு பால் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி 30 நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை இரவில் தூங்குவதற்கு முன் உபயோகிப்பது நல்லது. வாரம் இருமுறை செய்து வந்தால், முகப்பரு, கரும்புள்ளி, தேமல் போன்ற தொற்றுக்கள் வராமல் தடுத்து சருமத்தை பாதுகாக்கும்.

* பருக்கள், தேமல் இருந்தால், கஸ்தூரி மஞ்சள், சந்தனத்தை அரைத்துப் பற்று போடலாம்.

* பாதத்தில் ஏற்படும் வெடிப்புக்கும் விளக்கெண்ணெயுடன் மஞ்சள் சேர்த்துப் பூசினால், உடனடியாக சரியாகும்.

* கஸ்தூரி மஞ்சள் கிழங்கை அரைத்து உடல் முழுவதும் பூசி, சிறிது நேரத்தின் பின்னர் குளித்தால், தோல் சம்பந்தமான நோய்கள் நீங்கும்.

* கோடைக் காலத்தில் மஞ்சள் பூசுவதால், சருமம் குளிர்ச்சியாக இருக்கும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg