Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழகத்தில் மூன்று புதிய சட்டக்கல்லூரிகள்: எடப்பாடி அறிவிப்பு

In இந்தியா
Updated: 05:23 GMT, May 26, 2017 | Published: 04:40 GMT, May 26, 2017 |
0 Comments
1249
This post was written by : Risha
Edappadi Palanisamy

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில், குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வியை வழங்கும் வகையில், தமிழகத்தில் மூன்று புதிய சட்டக்கல்லூரிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

விழுப்புரம், இராமநாதபுரம் மற்றும் தருமபுரி ஆகிய இடங்களில் மேற்படி சட்டக்கல்லூரிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்புதிய சட்டக்கல்லூரிகள் 2017 – 18 ஆம் கல்வியாண்டில் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டக் கல்லூரி தொடங்குவதற்கான ஆரம்ப கட்ட பணிகளைத் தொடங்குவதற்காக 3 தனி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கல்லூரிகளை ஆரம்பிப்பதற்காக ரூ.6.81 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg