Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜி-7 மாநாட்டை முன்னிட்டு ஜேர்மனிய அதிபர் சிசிலிக்கு விஜயம்

In ஐரோப்பா
Updated: 09:13 GMT, May 26, 2017 | Published: 09:13 GMT, May 26, 2017 |
0 Comments
1331
This post was written by : Elakkiya

இத்தாலியின் டார்மினா நகரில் நடைபெறும் ஜி-7 மாநாட்டில் பங்கேற்றும் வகையில் ஜேர்மனிய அதிபர் அங்கெலா மேர்க்கல் இன்று (வெள்ளிக்கிழமை) சிசிலியை சென்றடைந்துள்ளார்.

இன்றும் நாளையும் என இரு தினங்களுக்கு நடைபெறவுள்ள ஜி-7 மாநாட்டில் பங்கேற்றும் வகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோங், ஜப்பான் பிரதமர் ஷின்ஆசா அபே ஆகியோர் நேற்றைய தினமே சிசிலிக்கு சென்றிருந்த நிலையில் அங்கெலா மேர்க்கல் இன்று சென்றடைந்துள்ளார்.

இந்த மாநாட்டில் ஜரோப்பாவின் அகதிகள் நெருக்கடி, ஆபிரிக்காவின் பொருளாதார முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை பிரித்தானியாவில் அண்மையில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல், வட கொரியாவின் அணு ஆயுத பரிசோதனை, சிரியாவின் உள்நாட்டு யுத்தம் குறித்தும் உலகத் தலைவர்கள் மத்தியில் விவாதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமின்றி, காலநிலை மாற்றம் மற்றும் வர்த்தகத்தில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பின் போக்கை மென்மையாக்குவதற்கு உலகத் தலைவர்கள் அழுத்தங்களை கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg