Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரதமருக்கும், கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

In இலங்கை
Updated: 11:30 GMT, May 26, 2017 | Published: 11:25 GMT, May 26, 2017 |
0 Comments
1412
This post was written by : Arul Jesu

பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையில் இன்று முற்பகல் அலரி மாளிகையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இதன் போது கிழக்கு மாகாணத்தில் உள்ள 445 தொண்டராசியர்களுக்கு உடன் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிழக்கு முதல்வர் நசீர் அஹமட் பிரதமரிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து கல்வியமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியராச்சியை உடன் அழைத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொண்டராசிரியர்களின் நியமனம் தொடர்பான தாமதத்திற்கான காரணங்களை கேட்டறிந்தார்.

இதனையடுத்து தொண்டராசியர்களுக்கு தீர்வை வழங்கும் நடவடிக்கையில் கல்வியமைச்சையும் இணைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கிழக்கு முதலமைச்சருக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் கடந்த 2013 ஆம் ஆண்டு வரையான தொண்டராசிரியர்களை கல்விச் சேவைக்கு இணைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேட்டுக் கொண்டார்.

தொண்டராசிரியர்களை நியமிக்கு விடயத்தை மாகாண கல்வியமைச்சிடம் கையளிக்க வேண்டும் எனவும் எனவும் கிழக்கு முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg