Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரமழானை முன்னிட்டு சிறப்பு தபால் தலையினை வெளியிட்ட கனடா போஸ்ட்

In கனடா
Updated: 12:30 GMT, May 26, 2017 | Published: 12:19 GMT, May 26, 2017 |
0 Comments
1315
This post was written by : Anojkiyan

முஸ்லிம்கள் கொண்டாடும் பெருநாளான ரமழான் பெருநாள் ஆரம்பமாவதை முன்னிட்டு கனடா போஸ்ட், சிறப்பு தபால் தலை ஒன்றினை வெளியிட்டுள்ளது.

உலகவாழ் முஸ்லிம்கள் இன்று (வெள்ளிக்கிழமை) நோன்பினை கடைபிடிக்கவுள்ள நிலையில் இந்த தபால் தலை வெளியிடப்பட்டுள்ளது.

கனேடிய முஸ்லிம்களின் ஒருங்கிணைவு பகுதிகளாக உள்ள மொன்றியல் மற்றும் றிச்மண்ட் ஹில் ஆகிய பகுதிகளில் முஸ்லிம் தலைவர்கள் மத்தியில் இடம்பெற்ற இரு வேறு நிகழ்வுகளில் இந்த தபால் தலை அறிமுகப்படுத்தப்படடது.

ரமழான் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் அரபு எழுத்துருக்களுடன், இஸ்லாமிய கட்டுமான மரபினையும் பிரதிபலிக்கும் வகையில், நீலம், மஞ்சள் மற்றும் பொன்நிறங்களால் அலங்கரிக்கப்பட்டு, மிகவும் அழகான வகையில் இந்த தபால் தலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்துப் பண்டிகையான தீபாவளியை முன்னிட்டும் சிறப்புத் தபால் தலை வெளியிடப்படும் என்ற அறிவிப்பினை இந்த வருட ஆரம்பத்தில் வெளியிட்ட கனடா போஸ்ட், இந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் யூத மக்களின் பண்டிகையை முன்னிட்டும் தபால் தலை ஒன்றினை வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg