Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெளிவிவகார அமைச்சினால் குற்றவிசாரணை பிரிவில் முறைப்பாடு

In இலங்கை
Updated: 17:46 GMT, May 26, 2017 | Published: 17:46 GMT, May 26, 2017 |
0 Comments
1228
This post was written by : Vithushagan

வௌிவிவகார அமைச்சருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் போலியான டுவிட்டர் கணக்கொன்றை செயற்படுத்தியமை தொடர்பில் வௌிவிவகார அமைச்சினால் குற்றவிசாரணை திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த டுவிட்டர் கணக்கைக் கொண்டு அமைச்சர் ரவி கருணாநாயக்கவை மேற்கோட்காட்டி போலி பிரசாரங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் காலமானதாக குறித்த டுவிட்டர் பக்கத்தில் செய்தியொன்று வௌியிடப்பட்டுள்ளது.

இவ்வாறான போலி செய்திகளை வௌியிடுபவர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு அதற்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வௌிவிவகார அமைச்சு, குற்றவிசாரணை திணைக்களத்திடம் கோரியுள்ளது.

இந்தவிடயம் தொடர்பாக இலங்கை கணிணி அவசர செயற்பாட்டு அமைப்பிடம் அறிவிக்கவும் வௌிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg