Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நிவாரண செயற்திட்டங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு ஆஸி.இலிருந்து ஜனாதிபதி பணிப்பு

In இலங்கை
Updated: 03:33 GMT, May 27, 2017 | Published: 03:32 GMT, May 27, 2017 |
0 Comments
1430
This post was written by : Risha

சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்குவதற்கு உடனடி செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

அவுஸ்ரேலியாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, நேற்று (வெள்ளிக்கிழமை) உள்நாடடலுவல்கள் அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஆகியோரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், நிவாரண நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி ஏற்பாடுகளை நிதி அமைச்சிலிருந்து பெற்றுக் கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அனர்த்தத்திற்கு உள்ளான மக்களை மீட்கும் நடவடிக்கைகளுக்கு முப்படையினரின் உதவியை பெற்றுக் கொள்ளுமாறும் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன், திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மணிசரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழந்த அனுதாபங்களையும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg