Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு ஐ.நா.விடம் கோரிக்கை

In இலங்கை
Updated: 03:57 GMT, May 27, 2017 | Published: 03:57 GMT, May 27, 2017 |
0 Comments
1470
This post was written by : Risha

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபை, சர்வதேச சமூகம் மற்றும் அயல் நாடுகளிடம் அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அனர்த்த சேவைகள் அமைச்சுடன் இணைந்து வெளிவிவகார அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

விசேடமாக தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்கான உதவிகளை வழங்குமாறே வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவிவரும் வெள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து வெளிவிவகார அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், அது தொடர்பில் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சுடன் தொடர்ந்தும் ஆலோசனை நடத்தி வருகிறது.

அத்துடன், அனர்த்த நிலைமை குறித்து ஆராய்வதற்கும், மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கவும் அவசர சேவை பிரிவொன்று நிறுவப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg