Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலியாவிடம் போராடி வீழ்ந்தது இலங்கை

In கிாிக்கட்
Updated: 04:36 GMT, May 27, 2017 | Published: 04:36 GMT, May 27, 2017 |
0 Comments
4165
This post was written by : Anojkiyan

ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான ஒருநாள் பயிற்சி போட்டியில், இலங்கை அணி 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அவுஸ்ரேலிய அணியிடம் போராடி வீழ்ந்தது.

நேற்று (வெள்ளிக்கிழமை) ஒவல் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலிய அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய இலங்கை அணி 7 விக்கெட் இழப்புக்கு 318 ஓட்டங்களை பெற்றது.

இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக அணித்தலைர் மெத்தியூஸ் 95 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் ஹென்றிகியுஸ் 3 விக்கெட்டுகளை வீழ்தினார்.

இதனைதொடர்ந்து, 319 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்ரேலிய அணி, 49.4 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணியை போராடி அவுஸ்ரேலிய அணி, வெற்றிக்கொண்டது.

இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக ஆரோன் பின்ஞ் 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் நுவான் பிரதீப் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg