Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எடப்பாடி தலைமையில் அ.தி.மு.க. அம்மா அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

In இந்தியா
Updated: 04:56 GMT, May 27, 2017 | Published: 04:56 GMT, May 27, 2017 |
0 Comments
1199
This post was written by : Risha

அ.தி.மு.க. அம்மா அணி மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. அம்மா அணியை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சி தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்போது, முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்று 100 நாட்களில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் சாதனை விளக்க பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்களை நடத்துதல், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என்பன தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

அ.தி.மு.க. அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முட்டுக்கட்டையை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்கள் ஆதரவை திரட்டி வருகிறார். எனவே ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த நிலைப்பாடு பற்றி கூட்டத்தில் முக்கியமாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg