Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹைட்ரோ காபன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் போராட்டம்

In இந்தியா
Updated: 05:22 GMT, May 27, 2017 | Published: 05:22 GMT, May 27, 2017 |
0 Comments
1273
This post was written by : Surenth

ஹைட்ரோ காபன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இன்று (சனிக்கிழமை) 46ஆவது நாளாகவும் தீர்வின்றி தொடர்கிறது.

இரண்டாம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான நூதன முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, ஏராளமான பொதுமக்கள், குறித்த திட்டத்திற்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும், மத்திய அரசை கண்டித்தும் பல்வேறு கோ‌ஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் உருவபொம்மையை தாக்கி பின்னர், கிராமத்தின் எல்லையில் பகுதியில் எரித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg