Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மெஸ்சியினை தொடர்ந்து பண மோசடியில் சிக்கிய ரொனால்டோ

In உதைப்பந்தாட்டம்
Updated: 07:48 GMT, May 27, 2017 | Published: 07:41 GMT, May 27, 2017 |
0 Comments
1476
This post was written by : Anojkiyan

போர்த்துக்கல் அணியின் முன்னணி கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, சம்பாதித்த வருமானத்திற்கு உரிய வகையில் வரி கட்டவில்லை என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார்.

முன்னணி கழக அணியான ரியல் மெட்ரிட் அணிக்காக விளையாடி வரும் அவர், அதில் வரும் வருவாய் மற்றும் விளம்பரங்கள் மூலம் வரும் பல கோடி ரூபாய்க்கு உரிய வகையில் வரி கட்டவில்லை என ஸ்பெயின் நாட்டின் வரித்துறை அதிகாரிகள் குற்றஞ்சுமத்தியுள்ளனர். ரொனால்டோ, சுமார் 8.95 மில்லியன் டொலர்கள் அளவிற்கு மோசடி செய்துள்ளதாக கருதுகின்றனர்.

கிறிஸ்டியானோ ரொனால்டோ 2011ஆம் ஆண்டில் இருந்து 2013ஆம் ஆண்டு வரை தனது படத்தை விளம்பரத்துக்கு பயன்படுத்துவதற்கான உரிமை குறித்து சரியான தகவலை தெரிவிக்கவில்லை என்று ஸ்பெயின் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளதன் அடிப்படையில் இந்த விவகாரம் வெளி வந்துள்ளது. ஒருவேளை வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி, ரொனால்டோ மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒரு வருடத்திற்கு நான்கு மாதம் என 12 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் என சட்ட வல்லுனர்கள் கூறுகின்றனர்.

வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கில் 21 மாத சிறைத்தண்டனையை எதிர்த்து உலக புகழ்பெற்ற கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி தொடர்ந்த மேன்முறையீட்டு மனுவை, ஸ்பெயின் உச்ச நீதிமன்றம் அண்மையில் நிராகரித்து தண்டனையை உறுதி செய்துள்ள நிலையில், ரொனால்டோவின் விவகாரமும் சூடுபிடித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg