Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரை சொந்த மண்ணில் நடத்த பாகிஸ்தான் திட்டம்

In கிாிக்கட்
Published: 08:37 GMT, May 27, 2017 |
0 Comments
1727
This post was written by : Anojkiyan
pakistan-super-league-best-tip

பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 3வது சீசனில் 8 போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் சபை திட்டமிட்டுள்ளது.

சுமார் 10 வருடங்களுக்கு முன் இலங்கை அணி வீரர்கள் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலினால் பாகிஸ்தான் சென்று விளையாட சர்வதேச அணிகள் தயக்கம் காட்டி வருகின்றநிலையில், வீரர்களிடையே உள்ள அச்சத்தைப் போக்கி, பாகிஸ்தான் மண்ணில் மற்ற நாடுகள் வந்து விளையாடுவதற்கு வழிவகை செய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் தலைவரான நஜம் சேதி கூறுகையில் ”அடுத்தமுறை 8 போட்டிகளை பாகிஸ்தான் மண்ணில் நடத்தப்போகிறோம். கராச்சி மற்றும் லாகூரில் தலா நான்கு போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது.

3வது தொடரில் அனைத்து வெளிநாட்டு வீரர்களும் கட்டாயம் பாகிஸ்தான் வந்து விளையாடுவார்கள். பாகிஸ்தான் வந்து விளையாட வேண்டும் என்பது அவர்களின் ஒப்பந்தத்தில் ஒரு பகுதியாக இருக்கும். பாகிஸ்தான் வந்து விளையாடும் வெளிநாட்டு வீரர்களுக்கு கூடுதலாக 50 சதவீதம் பணம் வழங்கப்படும். நட்சத்திர வீரர்களுக்கு 10 சதவீதம் கொடுக்கப்படும்” என கூறினார்.

இதுவரை ஐக்கிய அரபு இராஜ்யத்தில் நடத்தப்பட்ட பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர், அடுத்த முறை பாகிஸ்தான் மண்ணில் நடத்தப்படுவதால் ரசிகர்களும் ஒருபுறம் இன்ப வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg