Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஞ்செஸ்டர் தாக்குதல்: விசாரணைத் தகவல்கள் கசிந்தமைக்கு அமெரிக்கா பொறுப்பேற்பு

In
Updated: 11:39 GMT, May 27, 2017 | Published: 10:12 GMT, May 27, 2017 |
0 Comments
1723
This post was written by : Elakkiya

மஞ்செஸ்டர் தாக்குதல் குறித்த பிரித்தானியாவின் விசாரணை தகவல்களை கசியவிட்டதற்கான முழுப் பொறுப்பையும் அமெரிக்கா ஏற்றுக் கொள்ளும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் ரெக்ஸ் டில்லர்ஸன் தெரிவித்துள்ளார்.

நேற்று (வெள்ளிக்கிழமை) லண்டனில் இடம்பெற்ற பிரித்தானிய வெளியுறவுச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸனுடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் டில்லர்ஸன் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ பிரித்தானிய விசாரணை தகவல்கள் வெளியாகியமைக்கான முழுப் பொறுப்பையும் நாம் ஏற்றுககொள்கின்றோம். இவ்வாறு நிகழ்ந்தமைக்காக நாம் வருந்துகின்றோம். பொருத்தமற்ற தகவல்களை வெளியிட்டமைக்கு நிச்சயமாக நாம் கண்டனம் தெரிவிக்கின்றோம்’ என்று தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய மஞ்செஸ்டர் நகரில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியான 22 வயதுடைய சல்மான் அபேடியின் விபரங்கள் அமெரிக்க பத்திரிகைகளில் வெளியாகியதை தொடர்ந்து அமெரிக்காவுடனான புலனாய்வு தகவல் பரிமாற்றங்களை பிரித்தானிய பொலிஸார் இடைநிறுத்தினர்.

அதுமட்டுமின்றி இவ்வாறு தாக்குதல்தாரியின் விபரங்கள் மற்றும் தாக்குதலின் பின்னர் எடுக்கப்பட்ட பல ஒளிப்படங்கள் அமெரிக்க பத்திரிகையில் வெளியாகியமைக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் மீது பிரித்தானியா குற்றம் சாட்டியது.

இது குறித்து முன்னர் கருத்து தெரிவித்த பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, ‘ அமெரிக்காவுடன் நாம் கொண்டுள்ள உறவு மிகவும் முக்கியமானது என்பதுடன் மதிப்பு வாய்ந்தது. ஆனாலும் நாம் பகிரும் தகவல்களை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்’ என்று குறப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg