Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய அரசு பாரபட்சமாக செயற்படுகிறது: கிழக்கு மாகாண சபை தவிசாளர்

In இலங்கை
Updated: 09:48 GMT, May 27, 2017 | Published: 09:47 GMT, May 27, 2017 |
0 Comments
1307
This post was written by : Risha

ஏனைய மாகாண சபைகளுடன் ஒப்பிடுகையில், கிழக்கு மாகாண சபைக்கு மாத்திரம் மத்திய அரசினால் மிகக் குறைந்தளவான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது என கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாச கலபதி தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தவிசாளர்கள் சங்கத்தின் 7ஆவது தவிசாளர்கள் மாநாடு இன்று (சனிக்கிழமை) திருகோணமலையில் இடம்பெற்றது. குறித்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டின் அனைத்து மாகாண சபைகளுக்கும் மத்திய அரசினால் கூடியளவு நிதி வழங்கப்படுகின்றது. ஆனால், கிழக்கு மாகாணசபைக்கு மாத்திரம் குறைந்தளவு நிதியே வழங்கப்படுகிறது.

இருப்பினும் நாங்கள் கிடைக்கின்ற தொகையினை வைத்து வெற்றிகரமாக எமது மாகாணசபையை நடாத்திக்கொண்டிருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை பேரவைச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் மாகாண சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் உட்பட பல அரச அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg