Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டதில் தவறில்லை: கோஹ்லி

In விளையாட்டு
Updated: 10:14 GMT, May 27, 2017 | Published: 10:14 GMT, May 27, 2017 |
0 Comments
1220
This post was written by : Risha

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான விண்ணப்பம் கோரப்பட்டதில் எந்த தவறும் இல்லை என இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைகின்றது. எனவே, மேற்படி பதவிக்கு விருப்பம் தெரிவிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அழைப்பு விடுத்திருந்த நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த கோஹ்லி, எனக்கு தெரிந்த வகையில் இந்த நடைமுறைதான் பல வருடங்களாக நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் இந்த பதவிக்கான இடம் நிரப்பப்படுவதற்கு இதே காரணம்தான் கடைபிடிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கான பதவிக்காலம் முடியும்போது இதே முறைதான் கடைபிடிக்கப்படும்.

ஆகவே, முந்தைய காலத்தில் நடைபெற்றதில் இருந்து தற்போது கும்ப்ளே விவகாரத்தில் எந்த விஷயமும் மாறுபட்டதாக நான் பார்க்கவில்லை என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg