Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆஃப்கானுக்கு அதிக துருப்புக்களை அனுப்ப பிரித்தானியா திட்டமிட்டுள்ளது!

In
Updated: 10:29 GMT, May 27, 2017 | Published: 10:29 GMT, May 27, 2017 |
0 Comments
1313
This post was written by : Elakkiya

ஆஃப்கானிஸ்தானிற்கு அதிகளவு துருப்புக்களை அனுப்பி வைப்பதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ளது.

கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளின் துருப்புக்கள் ஆஃப்கானிஸ்தானில் நிலைகொண்டுள்ள போதிலும் அங்கு பாதுகாப்பின்மை மேலும் அதிகரித்துவருகின்றமையே பிரித்தானியாவின் மேற்படி தீர்மானத்திற்கு காரணமாக அமைந்துள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள பிரித்தானிய அரச தகவல்களின் பிரகாரம், ஆஃப்கானிஸ்தானில் நேட்டோவின் பணிகளுக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்குவதற்கும் போர் இடம்பெறாத பகுதிகளில் தமது துருப்புக்களின் பங்களிப்பை அதிகரிப்பதற்கும் பிரித்தானியா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஃப்கானிஸ்தானில் சுமார் 8,400 அமெரிக்க துருப்புக்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ள அதேவேளை நேட்டோ அமைப்பைச் சேர்ந்த ஏனைய நாடுகளின் 5000 துருப்புக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேவேளை சுமார் 500 பிரித்தானிய துருப்புக்கள் ஆஃப்கானிஸ்தானில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg