Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாப்பரசர் பிரான்ஸிஸ் ஜெனோவாவுக்கு விஜயம்

In ஐரோப்பா
Updated: 10:58 GMT, May 27, 2017 | Published: 10:57 GMT, May 27, 2017 |
0 Comments
1260
This post was written by : Elakkiya

பாப்பரசர் பிரான்ஸிஸ் வடக்கு இத்தாலி நகரான ஜெனோவாவுக்கு இன்று (சனிக்கிழமை) விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது ILVA   இரும்பு தொழிற்சாலைக்கு சென்ற  பாப்பரசர் அங்கு பணியாற்றும் 3500 ஊழியர்களையும் சந்தித்திருந்தார். அதனைத் தொடர்ந்து சான் லோரென்சோ கத்ரெல் தேவாலயத்தில் ஆயர்கள் மற்றும் மதகுருமார்களை சந்தித்து கலந்துரையாடினார்.

பின்னர் அகதிகள் மற்றும் வீடுகளை இழந்த மக்களுடன் தனது மதியபோசனத்தை நிறைவு செய்த பாப்பரசர் அதனைத் தொடர்ந்து குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்று அங்கிருந்த சிறுவர்களுடன் அளவளாவினார்.

பாப்பரசர் பிரான்ஸிஸ் அவர்களின் ஜெனோவாவுக்கான ஒருநாள் விஜயம் பியாசல் கென்னடியின் புனித வெகுஜன பிரார்த்தனையுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg