Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

அதிதீவிர ரோந்துப்பணிகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார்

In
Updated: 12:48 GMT, May 27, 2017 | Published: 11:00 GMT, May 27, 2017 |
0 Comments
1530
icon_com
This post was written by : S.K.Guna
Armed police 1

சனி, ஞாயிறு மற்றும் வங்கி விடுமுறை நாளான திங்கள்கிழமையிலும் ஆயுதம் தாங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் நாடுமுழுவதும் பாதுகாப்புக்கடைமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை அதிகாலைவேளை மன்செஸ்ரரில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில் குழந்தைகள் சிறுவர்கள் உட்பட 22 பேர் உயிரிழந்ததுடன் 50 க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து அதிதீவிர பாதுகாப்புக்கடமைகளில் ஆயுதம் தாங்கிய பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர். பொதுமக்கள் பயணிக்கின்ற ரயில்கள் மற்றும் ஒன்றுகூடுகின்ற இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இன்று சனிக்கிழமை வெம்பிலி (Wembley) அரீனாவில் நடைபெறும் FA கிண்ண இறுதிப்போட்டியில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் போட்டியைக் காணவருவர் என்பதனால் ஆயுதம் தாங்கிய பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இன்றையதினம் றக்பி இறுதிப்போட்டி ருவிக்னத்தில் (Twickenham) நடைபெறுவதனால் அங்கும் பொலிஸார் பாதுகாப்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாளை ஞாயிற்றுக்கிழமை கிரேட் மன்செஸ்ரர் நகரில் (Great Manchester ) நடைபெறவுள்ள ஓட்டப்போட்டியில் பல ஓட்டப்போட்டியாளர்கள் பங்கேற்பதுடன்  போட்டியைக்காண பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் ஒன்றுகூடவுள்ளனர் என்பதாலும் ஆயுதம் தாங்கிய பொலிஸார் அதிதீவிர ரோந்துப்பணிகளில் ஈடுபடுகின்றனர்.
Armed police 2

Armed police 3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg