Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஞானசார தேரர் குறித்து பொது பலசேனா அமைப்பின் முக்கியஸ்தரிடம் விசாரணை!

In இலங்கை
Updated: 11:16 GMT, May 27, 2017 | Published: 11:16 GMT, May 27, 2017 |
0 Comments
2550
This post was written by : Ravivarman

பொது பலசேனா அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகேயிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொது பலசேனா அமைப்பிற்கு எதிராக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் சில அமைப்புக்களினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமையவே இவர் இன்று (சனிக்கிழமை) விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அண்மையில் பொலிஸ் அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு செய்து அச்சுறுத்தல் விடுத்தமை, இனங்களுக்கு இடையில் மோதலை ஏற்படுத்தும் வகையில் உரையாற்றுதல் உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக பொது பலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் அமைப்புக்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஞானசார தேரரைக் கைது செய்வதற்காக விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையிலேயே பொது பலசேனா அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகோ பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

விசாரணைகளின் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவித்த பொது பலசேனா அமைப்பின் தலைமை நிறைவேற்று அதிகாரி டிலாந்த விதானகே, பொதுபலசேனா அமைப்பிற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதுடன் தமது அமைப்பிற்கெதிரான அவதூறுகளைத் தடுத்து நிறுத்த வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg