Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வவுனியாவில் இடம்பெற்ற இணையத்தளச் சந்தைப்படுத்தல் தொடர்பான கருத்தரங்கு

In இலங்கை
Updated: 11:47 GMT, May 27, 2017 | Published: 11:47 GMT, May 27, 2017 |
0 Comments
1432
This post was written by : Ravivarman

“சமூக வலைத்தளங்களினூடாக வியாபாரத்திற்கான சந்தைப்படுத்தல்” எனும் வலைத்தளத் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தும் நிகழ்வு இன்று (சனிக்கிழமை) வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி நிகழ்வு ‘விக்ரா’ (VICTA) நிறுவனத்தின் ஏற்பாட்டில் வவுனியா இரண்டாம் குறுத்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியொன்றில் நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.கிருஸ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வின் கௌரவ விருந்தினர்களாக வவுனியா மாவட்ட செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி பிறைசூடி, மற்றும் வவுனியா வர்த்தக சங்கத் தலைவர் ரீ.கே.ராஜலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

மங்கள விளக்கேற்றல் மற்றும் மதகுருமார்களின் ஆசி உரையுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியதுடன், நாட்டில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்திக்காக அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்வின் வளவாளர்களாக விக்ரா நிறுவனத்தின் பயிற்சியாளர்களான ஆர்.தமிழ் அளகன், எஸ்.சிவராஜா மற்றும் எஸ்.கே.எஸ்.நாசிம் ஆகியோர் கலந்துகொண்டு விளக்கமளித்தனர்.

நிகழ்வில் வவுனியா வர்த்தகர்கள், இளைஞர்கள், யுவதிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG_8969 IMG_8956 IMG_8952 (1) IMG_8934 IMG_8916 IMG_8915

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg