Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினி – ஆனந்த்ராஜ் திடீர் சந்திப்பு!

In சினிமா
Updated: 14:13 GMT, May 27, 2017 | Published: 14:13 GMT, May 27, 2017 |
0 Comments
1293
This post was written by : Ravivarman

நடிகர் ஆனந்த்ராஜ், ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக் காலங்களில் ரஜினி அரசியலில் ஈடுபடப்போகிறார் எனும் செய்திகள் வெளியாகிவரும் நிலையிலேயே நடிகர் ஆனந்த்ராஜ் ரஜினியை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பில், ஆனந்த்ராஜ் அரசியல் நிலைமைகள் குறித்துப் பேசியிருப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. அ.தி.மு.க.விலிருந்து விலகிய நடிகர் ஆனந்த்ராஜ், அண்மைக் காலங்களில் அரசியல் குறித்துப் பல விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

அத்துடன் ரஜினி ஜூலை மாதம் தனிக்கட்சி தொடங்குவார் என்று அவருடைய அண்ணன் சத்யநாராயணா தெரிவித்து இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg