Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி அனுதாபம்

In இலங்கை
Updated: 06:25 GMT, May 28, 2017 | Published: 05:53 GMT, May 28, 2017 |
0 Comments
1363
This post was written by : Ravivarman

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலையால் பாதிப்புக்களுக்கு உள்ளாகியிருக்கும் மக்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி மாளிகையின் உத்தியோகபூர்வ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த பத்திரிகையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

“122 பேரின் உயிர்களைக் காவுகொண்டு, மேலும் சுமார் 5 இலட்சம் பேரை இடம்பெயரச் செய்த இலங்கையின் இயற்கை அனத்தத்துக்கு ரஷ்ய அரசாங்கமும் மக்களும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளனர். பாதிப்புக்களில் இருந்து விரைவில் மக்கள் மீண்டுவரவேண்டும் என்பதுடன் அவர்களுக்கான இழப்பீடுகள் மற்றும் மீட்புப்பணிகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்” எனவும் அப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg