Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

”எமது போராட்டத்தை அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றதா?” – உறவுகளை தொலைத்தவர்கள் கேள்வி

In இலங்கை
Updated: 11:21 GMT, May 28, 2017 | Published: 08:19 GMT, May 28, 2017 |
0 Comments
1433
This post was written by : Varshini

காணாமல் போன தமது உறவுகள் தொடர்பான உண்மையை வெளிப்படுத்துமாறு கோரி தாம் முன்னெடுத்துவரும் போராட்டத்தை நீடிக்கவிட்டு, நல்லாட்சி அரசாங்கம் வேடிக்கை பார்க்கின்றதா என காணாமல் போனோரின் உறவினர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

யுத்தத்தின் போதும், இறுதி யுத்தத்தின் போது படையினரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலும் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பான உண்மை நிலையை வெளிப்படுத்துமாறு கோரி, கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 98ஆவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபடும் உறவினர்கள் இவ்வாறு கேள்வியெழுப்பியுள்ளனர்.

மாதக் கணக்கில் தாம் வீதியில் போராடி வரும் நிலையில், அரசாங்கம் தமது நிலை குறித்து சிறிதும் சிந்திப்பதாக இல்லையென இம் மக்களை கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, இம் மக்களின் போராட்டம் இன்னும் இரு தினங்களில் 100 நாட்களை எட்டவுள்ள நிலையில், அன்றைய தினம் சர்வமத பிரார்த்தனையில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

குறித்த சர்வமத பிரார்த்தனையில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், பொதுமக்கள் அரசியல் தலைவர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள் என சகலரையும் ஒத்துழைப்பு வழங்குமாறு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

missing (5) missing (1) missing (4) missing (6) missing (3)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg