Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

களுவாஞ்சிக்குடியில் ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு திருட்டு!

In இலங்கை
Updated: 09:37 GMT, May 28, 2017 | Published: 09:20 GMT, May 28, 2017 |
0 Comments
1205
This post was written by : Ravivarman

களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் கடை மற்றும் ஆலயத்தின் உண்டியல் என்பன உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள சில்லறைக் கடை ஒன்றும் அக்கடைக்கு அண்மையில் அமைந்துள்ள விஷ்ணு ஆலயத்தின் உண்டியலுமே நேற்றையதினம் (சனிக்கிழமை) இரவு உடைத்து திருடப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் கடையில் விற்பனைக்கிருந்த இருபதாயிரம் ரூபாய் பெறுமதிக்கும் மேலான தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகளும், ஒரு தொகைப் பணமும் திருடப்பட்டுள்ளதுடன், சில பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கடை உரிமையாளர் பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இக்கடைக்கு அருகில் அமைந்துள்ள ஆலயத்தின் பொருட்களை பாதுகாக்கும் அறையும் உடைக்கப்பட்டுள்ளதாகவும், உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளதாகவும் ஆலய நிருவாகத்தினரும் பொலிஸில் முறையிட்டுள்ளனர்.

இரண்டு திருட்டுச் சம்பவங்களையும் ஒரே நபர்கள்தான் மேற்கொண்டிருக்க வேண்டும் எனச் சந்தேகிப்பதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

5 2

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg